மேகதாது திட்டத்தை செயல்படுத்த அனுமதி பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
- நமது நிருபர் -: 'காவிரி நதியில் மேகதாது திட்டத்தை செயல்படுத்த, மத்திய நீர் ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை பிறப்பித்து, அனுமதி வழங்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ராஜஸ்தானுக்கு பின், அதிக வறண்ட நிலப்பரப்பை கொண்ட மாநிலமாக கர்நாடகா இருந்தது. நாங்கள் செயல்படுத்தி வரும் நீர்ப்பாசன திட்டங்களின் விளைவாக, வறண்ட நிலங்கள், வளமான நிலமாக மாறி வருகின்றன. விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு வருமானத்தை வழங்கவும் போதுமான தண்ணீர் வழங்குவதில் மாநில அரசு வெற்றி பெற்றுள்ளது.
மேலாண்மை காவிரி நதியில் மேகதாது திட்டம் தொடர்பாக தமிழக அரசின் பல்வேறு மனுக்களை, கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க, மத்திய நீர் ஆணையத்துக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஏற்கனவே, மத்திய நீர் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளது. எனவே, மத்திய நீர் ஆணையத்துக்கு, வழிகாட்டுதல்களை பிறப்பித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக, கிருஷ்ணா நீர் தீர்ப்பாயம் தீர்ப்பு அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இத்திட்டத்துக்காக மாநில அரசு, அதிக தொகையை செலவிட்டிருந்தாலும், அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால், திட்டத்தின் பலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதை விரைவில் தீர்க்க வேண்டும்.
கிருஷ்ணா மேலணை திட்டத்துக்கு 2023 - 24 பட்ஜெட்டில், மத்திய அரசு, 5,300 கோடி ரூபாய் மானியம் அறிவித்தது. இப்பணத்தை விடுவிக்க மத்திய நிதித்துறையிடம் கோரிக்கை வைத்தும், இன்னும் மானியம் வரவில்லை.
இவ்விஷயத்தில் நீங்கள் தலையிட்டால், உதவியாக இருக்கும். இத்திட்டம், கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவியாக இருக்கும்.
தலையீடு மத்திய நீர் ஆணையம் / ஜல் சக்தி அமைச்சகம், ஹூப்பள்ளி - தார்வாடுக்கு குடிநீர் வழங்குவதற்காக 'கலசா பண்டூரி நாலா திட்டத்தை (மகதாயி) டிசம்பர் 2022ல் அங்கீகரித்தது.
இத்திட்டங்களுக்கு சட்டப்பூர்வ தடைகள் இல்லை என்றாலும், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இன்னும் அனுமதி வரவில்லை. இதனால் இத்திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் வழங்க முடியவில்லை. இப்பிரச்னையில் நீங்கள் தலையிட்டு தீர்வு காண உதவ வேண்டும்.
தேசிய நீர் மேம்பாட்டு முகமை, நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ், சமத்துவம், நியாயமான விநியோக கொள்கையின் கீழ், கர்நாடகத்துக்கு நியாயமான நீர் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.
நீர்வளத்துறை தொடர்பாக நிலுவையில் உள்ள திட்டங்கள், பிரச்னைகள் தொடர்பாக உங்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். கர்நாடக நீர்வள துறை தொடர்பாக, நிலுவையில் உள்ள திட்டத்தை அங்கீகரிக்க, மத்திய ஜல் சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம், வானிலை ஆய்வு துறையை வழிநடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும்
-
வடலுாரில் இரு இடங்களில் 2 பேர் சடலமாக மீட்பு
-
திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்: மணமகன் புகார்
-
பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
-
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
-
மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது
-
விபத்து இழப்பீடு தராததால் திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி