மயிலம் பத்திர பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் சிக்கியது
மயிலம்: மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் சிக்கியது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் நிர்ணயித்து இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை 5:50 மணியளவில் மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இரவு 7:35 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 230 ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் சிக்கியது.
இதுகுறித்து சார்பதிவாளர் (பொறுப்பு) நதியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில் 'பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
மேலும்
-
வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யணும்; சீனாவை மேற்கோள் காட்டிய நாராயண மூர்த்தி
-
சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: டிச.,10 வரை இடைக்கால தடை நீட்டிப்பு
-
ஐ என் டி யூ சி தலைவர் தேர்வு
-
நவ., 21ல் 7 மாவட்டம், நவ.,22ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
-
அட்டகாசமான அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க; பயனர்களுக்கு ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்