காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்
அச்சிறுபாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண், 20. இவர், அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா, 19, என்ற பெண்ணை காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.
மதுமிதா, அடிக்கடி ஆண் நண்பருடன் மொபைல் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை சரண் பலமுறை கண்டித்து உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, அச்சிறுபாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில் உள்ள மலை கோவிலுக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மதுமிதாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது, பெண் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த ஒரத்தி போலீசார், மதுமிதா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சரணை கைது செய்தனர்.
மேலும்
-
'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது
-
காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்
-
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
-
எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்
-
சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்