வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் படுமோசம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம், வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள வருவாய் துறையின் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது. இக்கட்டடத்தின் அடிப்பகுதியும், கூரையும் வலுவிழந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

மேலும், சுவரின் பல்வேறு பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால், மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் அங்கன்வாடி மையத்தை ஒட்டி, கட்டட இடிபாடுகளும் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டட இடிபாடுகளை அகற்றவும், வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு, பள்ளி வளாகத்திற்கு வெளியே புதிதாக கட்ட வே ண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement