கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
நங்கவள்ளி, ஓமலுார், தொளசம்பட்டி அருகே அமரகுந்தியை சேர்ந்தவர் முருகன், 55. நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,
யாக பணியாற்றினார். இவருக்கு மனைவி விஜயலட்சுமி, 48, மகள் ப்ரியதர்ஷினி, 20, மகன் ஹரிஹரசுதன், 16, உள்ளனர்.
நேற்று முருகன், தாரமங்கலம், குறுக்குப்பட்டியிலிருந்து, நங்கவள்ளிக்கு, 'ஈகோ' காரில் பணிக்கு புறப்பட்டார். மாலை, 5:45 மணிக்கு நங்கவள்ளி அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த மினி பஸ், கார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகனை, மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார்.
நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, மினி பஸ்சை பறிமுதல் செய்தனர். பஸ்சை விட்டு தப்பி ஓடிய, அதன் டிரைவரான, சின்னசோரகையைச் சேர்ந்த குமார், 46, என்பவரை, போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'நிதானமின்றி' டூவீலர் ஓட்டும் இளைஞர்களுக்கு பல்லு பத்திரம்! வாரம் 50 பேருக்கு தாடை எலும்பு, பற்கள் அடிபடுது
-
காளை களைப்படைந்தது போல தெரிகிறது! :டெக்னிக்கல் அனாலிசிஸ்
-
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்ப பெற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
-
எக்ஸெல்சாப்ட் டெக்னாலஜிஸ்
-
சர்வதேச சிலம்பம்: மதுரைக்கு பதக்கம்
Advertisement
Advertisement