ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு, ஏற்காடு, அதன் சுற்று வட்டார பகுதிகள் முழுதும் நேற்று அதிகாலை பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், 5 அடி துாரத்தில் உள்ளது கூட தெரியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள், மெதுவாக சென்றனர். உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், வீடுகளில் முடங்கினர். மதியம், 3:40 முதல், மாலை, 6:10 மணி வரை, ஏற்காடு, அதன் சுற்றுப்பகுதி

களில் சாரல் மழையும் பெய்தது. குளிரின் தாக்கமும் அதிகம் இருந்தது. இதனால் சுற்றுலா பயணியரும், விடுதிகளில் முடங்க, சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின.


அதேபோல் ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், 9:00 மணி முதல் சாரல் மழை பெய்தது. மதியம், 3:00 முதல், 4:00 மணி வரை, கனமழை பெய்தது. பின் சாரல் மழையாக தொடர, மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மதியம் கனமழை கொட்டியது.

Advertisement