எஸ்.ஐ.ஆர்., பணியை புறக்கணித்து வருவாய்த்துறையினர் வேலைநிறுத்தம்



சேலம், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை அவசர கதியில் முடிக்க நிர்பந்திப்பதை கண்டித்து, சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர் நேற்று ஒருநாள், அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


இதனால் தாசில்தார், சர்வேயர், வி.ஏ.ஓ., உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டனர். இதன் எதிரொலியாக, சேலம் கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை பிரிவு உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடின.
இப்போராட்டத்தால், வீடுகள் தோறும் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, விபரங்களை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணியை, டிச., 4க்குள் முடிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Advertisement