குடும்பமே தற்கொலை செய்த விவகாரம் துாண்டிய நிதி நிறுவன அதிபருக்கு 'காப்பு'
சேலம், சேலம், அரிசிபாளையம், முத்தியால் தெருவை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பால்ராஜ், 42. இவரது மனைவி ரேகா, 37. இவர்களுக்கு, 15 வயதில் மகள் இருந்தார். கடந்த ஜன., 28ல், 3 பேரும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளப்பட்டி போலீசார், வீட்டில் மேற்கொண்ட சோதனையில், ரேகா எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், 'உறவினரான சேலம் பொன்னம்மாபேட்டை, ஜவஹர் நகரை சேர்ந்த சண்முகத்திடம், 2,00,000 ரூபாய் கடன் பெற்று, அதற்கு சரிவர வட்டி செலுத்த இயலவில்லை.
அதனால் அவர், வட்டி தர முடியாவிட்டால், என்னுடன் படுத்து கடனை தீர்த்துவிடு' என பேசி, அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்தார். அந்த வேதனையில், 3 பேரும் தற்கொலை செய்து கொண்டோம்' என, குறிப்பிட்டிருந்தார்.
அதன் உண்மைத்தன்மையை கண்டறிய, சென்னை தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு நடந்த பரிசோதனையில், கடிதத்தில் இருப்பது ரேகா கையெழுத்து என உறுதியானது. அதன் எதிரொலியாக, தற்கொலைக்கு துாண்டியதாக, 10 மாதங்களுக்கு பின், நிதி நிறுவன அதிபர் சண்முகம், 55, நேற்று கைது
செய்யப்பட்டார்.
மேலும்
-
தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு
-
துணை முதல்வர் பிறந்தநாளை 2 மாதம் கொண்டாட முடிவு
-
கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
-
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்
-
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி