கஞ்சா பறிமுதல் 2 பேர் சிக்கினர்

சங்ககிரி, சங்ககிரி போலீசார், ஈரோடு பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். இருவர், பெரிய பையை வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்தனர்.


அப்போது, 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் திருப்பூர் மாவட்டம் கேதாம்பாளையத்தை சேர்ந்த பரசுரம், 25, கடலுார் மாவட்டம், புவனகிரி, எரும்பூரை சேர்ந்த ஆகாஷ், 22, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement