வீட்டின் கதவை உடைத்து 2 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
மேட்டூர், மேட்டூர், கருமலைக்கூடல், லட்சுமி தியேட்டர் பின்புறம் வசிப்பவர் கிருஷ்ணராஜ், 70. ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாவித்ரி, 64. இவர்கள், கடந்த மாதம், 7ல் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றனர். 23ல் மகனுடன் வீடு திரும்பிய தம்பதியர், குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு, மீண்டும் சென்னை சென்று விட்டனர்.
நேற்று முன்தினம் காலை, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண், சாவித்ரியை தொடர்பு கொண்டு, அவரது வீட்டு கதவு உடைந்து கிடப்பதாக கூறியுள்ளார். உடனே தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது, மேஜை டிராவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் மோதி ரம், இரு அரை பவுன் மோதிரம், 'டிவி', திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நேற்று, சாவித்ரி புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு
-
துணை முதல்வர் பிறந்தநாளை 2 மாதம் கொண்டாட முடிவு
-
கார் - மினி பஸ் மோதல் எஸ்.எஸ்.ஐ., உயிரிழப்பு
-
பள்ளி முன் வேன் டிரைவர்கள் இடையூறு கலெக்டருக்கு புகார் அனுப்பிய ஹெச்.எம்.,
-
ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் சாரல் மழை விடுதிகளில் முடங்கிய சுற்றுலா பயணியர்
-
வ.உ.சி., நினைவு நாளில் பா.ஜ.,வினர் அஞ்சலி
Advertisement
Advertisement