மதுரை தம்பதியின் 40வது உலக சாதனை
மதுரை: மும்பையில் நடந்த 'இந்தியாஸ் காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் நாராயணன் - ஸ்ருதி தம்பதியினர் உலக சாதனை படைத்துள்ளனர்.
பயிற்சியாளர் ஸ்ருதி, டேக்வாண்டோ போட்டியில் ஒரு நிமிடத்தில் 103 கிக்குகள் அடித்து கின்னஸ் உலகச் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் ஸ்பெயினைச் சேர்ந்த சையது ஒரே நிமிடத்தில் 99 கிக்குகள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. பயிற்சியாளர் நாராயணன் 30 வினாடிகளில் 37 எரியும் கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து உலக சாதனை படைத்தார். முந்தைய உலக சாதனையாக 29 எரியும் கான்கிரீட் கற்கள் உடைக்கப்பட்டு இருந்தது.இது இத்தம்பதியருக்கு 40வது உலக சாதனை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்க கட்டாய படுத்துறாங்க! வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்லும் மக்கள்
-
குடியிருப்போர் குரல் . . .
-
அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
-
போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
-
பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது
-
ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து
Advertisement
Advertisement