கீழடி அருங்காட்சியகத்தில் போர்டுகள் புதுப்பிப்பு
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் பழைய பெயர் பலகைகள் அகற்றப்பட்டு புதிய பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய 13 ஆயிரத்து 384 பொருட்கள் ஆறு கட்டட தொகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகம் வந்து செல்கின்றனர்.
அருங்காட்சிய நுழைவு வாயில் அருகிலும் டிக்கெட் கவுன்டர் அருகிலும் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலைய துறை சார்பில் கீழடி அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரம் குறித்தும் டிக்கெட் கவுன்டர் அருகே நுழைவு கட்டணம் குறித்தும் பெயர் பலகைகள் பிளாஸ்டிக்கில் வைக்கப்பட்டிருந்தன.
வெயில், மழை காரணமாக அவை வெளிறிப்போய் காட்சியளித்தன.
உள்நாடுமட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் தரமான பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப புதிய தரமான பெயர் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
வெயில் மழை உள்ளிட்டவற்றால் சேதமடையாமல் இருக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டண விபரம் பொறிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தினுள்ளும் பெயர் பலகை இல்லாத இடங்களில் புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார்.
கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்க கட்டாய படுத்துறாங்க! வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்லும் மக்கள்
-
குடியிருப்போர் குரல் . . .
-
அமெரிக்காவின் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
-
போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்
-
பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் முதியவர் கொலை: வாலிபர் கைது
-
ஈரான் இந்தியர்களுக்கான இலவச விசா ரத்து