பொய் பாராட்டு பத்திரம் உறுத்தவில்லையா?

3

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள அரசு தொடக்க பள்ளி மற்றும் உயர் நிலை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தருவதாக கூறி, அப்பகுதி கவுன்சிலர் பள்ளி வகுப்பறைகளை இடித்துள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வகுப்பறை கட்டி தரவில்லை. இதனால், மாணவர்கள் கோவில் வளாகத்தில் படித்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இப்படி, தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், கோவில் வளாகத்தில் வகுப்பறைகள் நடப்பதும் வாடிக்கையாகி விட்டது.

பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ். தி.மு.க., அரசு ஒதுக்கிய, 12,300 கோடி ரூபாய் என்ன ஆனது? தமிழகத்தின் கல்வியமைப்பை இப்படி மொத்தமாக சீரழித்து விட்டு, 'கல்வியில் சிறந்த தமிழகம்' என்ற விளம்பர விழா எடுத்து, தங்களுக்கு தாங்களே பொய் பாராட்டு பத்திரம் வாசித்து கொள்ள. தி.மு.க., தலைவர்களுக்கு உறுத்தவில்லையா?

- நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement