காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை பள்ளி மாணவி ஏற்க மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்த முனிராஜ், தன்னை காதலிக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார்.


ஆனால், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த மீன்பிடி வலை பழுதுபார்க்க உதவும் கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்து சரிந்து விழுந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், சேராங்கோட்டையைச் சேர்ந்த முனிராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


காதலிக்க மறுத்த பள்ளி செல்லும் மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement