பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா; புட்டபர்த்தியில் பிரதமர் மோடி வழிபாடு: தினமலர் சேனலில் நேரலை
புட்டபர்த்தி:
புட்டபர்த்தி வந்துள்ள பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ளார். முன்னதாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்ச்சியை
தினமலர் இணையத்தில் நேரலையில் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
ஸ்ரீ
சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல்
பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார்.
புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில்
பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக
செயல்படுகின்றன.
போதனைகள்
இந்தியா மட்டுமின்றி உலகின்
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால்
ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர். புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்
பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி
தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை
சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மகா சமாதியில் அஞ்சலி
இவ்விழாவில்
பங்கேற்க, பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில்
அஞ்சலி செலுத்தினார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின்
நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார். முதலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் அசத்தல் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து நடந்த விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் மகிமைகளை பற்றி உரையாற்றினர்.
தபால் தலை
பகவான்
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை
கவுரவிக்கும் விதமாக நினைவு நாணயம் மற்றும் ஒரு தபால் தலையை பிரதமர் மோடி
வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சியை தினமலர் இணையத்தில் நேரலையில் பார்க்க
இங்கே கிளிக் செய்யுங்கள்.
விழாவில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
சாய்பாபா போதனைகள் வாழ்க்கைக்கு மிகவும் உகந்தது, அதனை கவுரவிக்கும் வகையில் மக்களுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதுக்கு உங்களுக்கு நன்றிமேலும்
-
ஆந்திராவில் இன்றும் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியர்களை வெறுக்கும் நியூயார்க் மேயர்; அதிபர் டிரம்பின் மகன் குற்றச்சாட்டு
-
பருவநிலை மாற்றத்தை தடுக்கும் செயல்பாடு; இந்தியாவுக்கு 10 இடங்கள் சரிவு
-
அரசு நில மோசடி வழக்கில் அஜித் பவாரின் மகனுக்கு தொடர்பில்லை; விசாரணை குழு அறிக்கை
-
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் எதிரொலி; வங்கதேசம் திரும்ப முயன்ற ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது
-
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திகொலை; வாலிபர் கைது