செஞ்சி கோட்டையை பார்வையிட்ட வெளிநாட்டு துாதரக அதிகாரிகள்

செஞ்சி: இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் செஞ்சி கோட்டையை பார்வையிட்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாட்டின் பேரில் மலேஷியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், தாய்லாத்து, தைவான் நாடுகளை சேர்ந்த துாதரக அதிகாரிகள் 9 பேர் நேற்று உலக பாரம்பரிய சுற்றுலா பயணமாக செஞ்சி கோட்டையை பார்வையிட்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் சென்னை அலுவலக செயலர் விஜயகுமார் தலைமையில் வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் 9 பேர் நேற்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையை பார்வையிட்டனர்.

இந்திய தொல்லியல்துறை சென்னை வட்ட முதுநிலை நிர்வாக அலுவலர் ரகு, செஞ்சி கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில், அலுவலர்கள் பிரதீப், சிவராமன் உள்ளிட்ட குழுவினர் தூதரக அதிகாரிகள் குழுவினரை வரவேற்றனர். தொடர்ந்து, கல்யாண மகால், காவலர் குடியிருப்பு, தர்பார் ஆகிய இடங்களை சுற்றிக் காட்டி அதன் பெருமைகளை விளக்கினர்.

தொடர்ந்து, செஞ்சி கோட்டையில் நடந்து வரும் தொல்லியல் துறை புகைப்பட கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் செஞ்சி கோட்டையை வியப்புடன் கண்டு ரசித்தனர்.

Advertisement