துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு கோவையில் அஞ்சலி
கோவை: துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் சக விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை கலெக்டர் அஞ்சலி செலுத்தினார்.
துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது. இந்தியா உட்பட முன்னணி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. இந்திய விமானப்படை சார்பில் விமான சாகச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் விழுந்து தீப்பற்றியது.


சூலூர் விமானப்படை தளத்தில் சியால் கமாண்டராக பணியாற்றி வந்தார். சூலூர் விமானப்படை குடியிருப்பில் சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி தான். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார்.
7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். சியால் விமான விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி இருந்தனர்.
அவரது உடல் சூலூர் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து இமாச்சல் மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு விமானம் மூலம் சூலூரில் இருந்து சியால் உடல் கொண்டு செல்லப்பட்டது.
வாசகர் கருத்து (9)
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
23 நவ,2025 - 11:11 Report Abuse
மிக மன வேதணை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள் 0
0
Reply
Meenachisundaram P - ,இந்தியா
23 நவ,2025 - 11:04 Report Abuse
உயிர் இழந்த தேசத்தின் தலை மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
23 நவ,2025 - 10:56 Report Abuse
Very very unfortunate incident. It was never expected. We lost a brave warrior. Lets pray for the soul to rest in peace. Also we pray the Almighty to give sufficient strength and peace to the bereaved family. Enquiry will reveal the cause of the mishap and accordingly precautions will be taken by HAL. 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
23 நவ,2025 - 10:49 Report Abuse
விபத்து நடக்கும் என்றே தெரிந்து சாகச பணியில் ஈடுபடுகிறார்கள் 0
0
Reply
aaruthirumalai - ,
23 நவ,2025 - 10:31 Report Abuse
ஆழ்ந்த இரங்கல். மீண்டும் இப்படிப்பட்ட ஒரு உயிரிழப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும். 0
0
Reply
Jayakumar Kumar - Muscat,இந்தியா
23 நவ,2025 - 10:12 Report Abuse
விபத்து நடந்து இருக்கிறது காரணம் விசாரணையில் தெரிய வரும். நஷடம் விமானி தான். அவர் குடுமப்த்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
23 நவ,2025 - 10:00 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
23 நவ,2025 - 09:27 Report Abuse
இந்த விமானம் விபத்துக்குள் ஆன பிறகு இங்குள்ள திராவிட கும்பல் மொத்தமும் இந்தியாவுக்கு எதிராக இந்த விமானம் பற்றும் விமான படை பற்றி கருத்துக்கள் பதிவிடுக்கின்றன. 0
0
Reply
Ramesh Trichy - ,இந்தியா
23 நவ,2025 - 09:26 Report Abuse
மிகவும் வருத்தமான சம்பவம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இறக்கங்கள். 0
0
Reply
மேலும்
-
நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி என்கிறார் விஜய்
-
டிசம்பர் 10ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது!
-
ரம்யாவின் ராகங்கள்...
-
வரி, முதலீடுகளால் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர்கள்; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்
-
திருக்குறளுக்கு 'பொருள்குறள்' எழுதி தமிழுக்கு மகுடம் சூட்டிய தையல் தொழிலாளி
-
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா; ரதோத்சவத்துடன் துவங்கியது
Advertisement
Advertisement