வங்கக்கடலில் நவ.26ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு; இந்திய வானிலை மையம் தகவல்


புதுடில்லி: தென்கிழக்கு வங்கக் கடலில் நவ.,26ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.


இது நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு, வட மேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மேலும் வலுப்பெறக்கூடும்.



நவ.,26ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது. புயல் உருவானால் ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த, சென்யார் என பெயர் வைக்கப்படும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அதிக மழைப்பொழிவு எங்கே!



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விவரம் மில்லி மீட்டரில்

* நாலுமுக்கு- 256

* ஊத்து- 250

* கக்கச்சி- 225

* மாஞ்சோலை- 210

* திருச்செந்தூர்- 133

* குலசேகரப்பட்டினம்- 129

* கயத்தார்- 113

* காயல்பட்டினம்- 103

* சாத்தான்குளம்- 94

* ஆயிக்குடி- 86

* செங்கோட்டை -86

* பாபநாசம்- 78

* ஸ்ரீவைகுண்டம்- 77

* அம்பாசமுத்திரம்- 75

* கடம்பூர்- 74

* குண்டாறு அணை- 72

* கடனா அணை- 70

* சேரன்மாதேவி - 69

* கலயநல்லூர்- 65


* சேர்வலார் அணை- 64

* கருப்பநதி அணை- 54

* கன்னடியன் அணைக்கட்டு- 53

* அடவிநயினார் கோயில் அணை- 53

* உளுந்தூர்பேட்டை- 52

* சூளங்குறிச்சி- 46

* தியாகதுருகம்- 45

* தலைவாசல்- 44

Advertisement