வெளிநாடுகளில் ஆதரவு திரட்டிய ஹமாஸ் முறியடித்ததாக இஸ்ரேல் புது தகவல்
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன், ஆஸ்திரியாவில் இயங்கி வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக, இஸ்ரேல் உளவு அமைப்பான, 'மொசாட்' கூறியுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து குவியல், குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு குழு மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த போர், இருதரப்பின் ஒத்துழைப்புடன் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு குழுக்களை கண்டறிந்து, அந்த வலையமைப்பை இஸ்ரேல் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக அதன் உளவு அமைப்பான மொசாட் தெரிவித்துள்ளது.
இது குறித்து மொசாட் கூறியிருப்பதாவது:
ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியாவில் இருந்து, ஜெர்மனி வரை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த குழுக்கள் செயல்பட்டு வந்துள்ளன.
வேட்டை இஸ்ரேல் மற்றும் யூத அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த இக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.
ஜெ ர்மனி, ஆஸ்திரியா உட்பட ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த செப்டம்பரில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இ ஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானது.
இதற்காக அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப் பற்றப்பட்டன.
முக்கிய பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டுள்ளதால், தற்போது இந்தக் குழுக்கள் செயல்படாத நிலையில் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு மொசாட் கூறியுள்ளது.
மேலும்
-
அணைமேட்டில் 56 அடி உயர ராஜமுருகன் சிலைக்கு கும்பாபிேஷகம்
-
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்
-
மனைவி கத்தியால் குத்தி கொலை 'சந்தேக' கணவர் வெறிச்செயல்
-
கட்டப்பட்ட மூன்றே ஆண்டில் சேதமடைந்த வடிகால்வாய்
-
வில்லிவாக்கத்தில் இருந்து தி.மலைக்கு திருக்குடை யாத்திரை
-
அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு விமோசனம் எப்போது?