ராமாபுரத்தில் பராமரிப்பற்ற பூங்கா மேய்ச்சல் இடமாக மாறிய அவலம்

அச்சிறுபாக்கம்: எலப்பாக்கம் அடுத்த ராமாபுரத்தில், பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட பூங்கா பராமரிப்பின்றி, மாடுகளின் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், வேலாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தினர் பயன்பெறும் வகையில், எலப்பாக்கம் செல்லும் சாலையோரம், உயர்நிலைப் பள்ளி எதிரே, 30 லட்சம் ரூபாயில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

இளைஞர்களுக்கு, உடற்பயிற்சிக்கூடமும் அமைக்கப்பட்டு உள்ளது.

பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக, கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகளுடன் கூடிய கம்பம், இருக்கை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இத்தனை வசதிகள் இருந்தாலும், பூங்காவை சரியான முறையில் ஊராட்சி நிர் வாகம் பராமரிக்கவில்லை. இதனால், அனைத்து உபகரணங்களும் பழுதடைந்து உள்ளன. நடை பயிற்சி தளமும் சேதமடைந்து உள்ளது.

பூங்கா வளாக பகுதியில் நடந்து செல்ல முடியாத வகையில், காலி மதுபாட்டில்கள் உடை ந்து சிதறியுள்ளன.

உடற்பயிற்சிக்கூடத்தில் உள்ள பொருட்கள் திருடப்பட்டு வருகின்றன.

இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாகவும், இந்த பூங்கா மாறி வருகிறது.

அத்துடன், மாடுகளின் மேய்ச்சல் இடமாகவும் பூங்கா மாறி உள்ளது.

எனவே, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் மற் றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement