தாய் இறந்த துக்கம் தாளாமல் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
கொடுங்கையூர்: தாய் இறந்த துக்கம் தாளாமல், பிளஸ் 1 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடுங்கையூர், யூனியன் கார்பைடு காலனியைச் சேர்ந்தவர் உதயசங்கர், 38. இவரது மகன் திரூஸ், 16; பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர் 10ம் வகுப்பு தேர்வில், பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். சிலம்பம், கராத்தே ஆகிய கலைகளில் தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார். இவரது தாய் நிஷாந்தினி, கடந்த 2024 நவ., 24ம் தேதி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தாய் இறந்த துக்கம் தாளாமல், திரூஸ் கடந்த ஓராண்டாக மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தந்தையிடம், 'நான் அம்மாவை பார்க்க வேண்டும்; கூட்டி வாருங்கள்' என, தொடர்ந்து கூறிவந்துள்ளார்.
நேற்று தங்கை அர்ஷிதாவை திரூஸ் டியூஷனில் விட்டு வந்துள்ளார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த திரூஸ், வீட்டின் படுக்கை அறையில், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
விஜயகாந்த் குருபூஜை விழாவில் 1,000 பேர் பங்கேற்க தீர்மானம்
-
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இன்று கூட்டுறவு மாதிரி நேர்முக தேர்வு
-
ஹோட்டல் ஊழியரை தாக்கிய 4 பேர் கைது
-
ஒரு ஆண்டுக்கு மேல் நீண்ட துாரம் பயணிக்கும் பயணிகள் விசைப்படகு
-
அணைமேட்டில் 56 அடி உயர ராஜமுருகன் சிலைக்கு கும்பாபிேஷகம்
-
பகவான் சத்ய சாய் பாபா நுாற்றாண்டு விழா குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம்