அணைமேட்டில் 56 அடி உயர ராஜமுருகன் சிலைக்கு கும்பாபிேஷகம்
தாரமங்கலம்:அணைமேட்டில், 56 அடி உயர ராஜமுருகன் சிலை கும்பாபிேஷகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம், இரும்பாலை-தாரமங்கலம் ரோட்டில் அணைமேடு பகுதியில் ராஜமுருகன் ஆசிரமம் உள்ளது. சிறிய கரடு மேல் அமைந்துள்ள மூலவர் ராஜ முருகன் கோவிலில் கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் கோவில் நுழைவாயிலில், 56 அடி உயர ராஜமுருகன் சிலை அமைக்க நிர்வாகம் சார்பில் முடிவு செய்து, கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த அக்., இறுதியில் புதிய வடிவத்தில் ராஜமுருகன் கம்பீரமாக காட்சியளித்தார். இதையடுத்து கோவில் சார்பில் கும்பாபிேஷகம் பணி துவக்கப்பட்டது.
கடந்த, 17ல் முகூர்த்தக்கால், முளைப்பாளிகை போடுதல், கங்கணம் கட்டுதல் நடைபெற்றது. நேற்று முன் தினம், சரபங்கா ஆற்றிலிருந்து, 3 ஆயிரம் பக்தர் பங்கேற்று தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்தகுடம் புறப்பட்டது. பின் கிரேன் மூலம் கொண்டு சென்று, ராஜமுருகன் சிலைக்கு, அரோகரா கோஷம் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் செய்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்
கும்பாபிேஷக விழாவில் பங்கேற்றனர்.
மேலும்
-
கோபி, நம்பியூரில் சாரல் மழை
-
2 பெண்கள் உள்பட மூன்று பேர் மாயம்
-
கார் டிரைவரால் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அமைச்சர் உதவி
-
ரயில்வே ஸ்டேஷனுக்கு வழித்தடத்துடன் காளை மாட்டு சிலை சிக்னல் விரிவாக்கம்
-
ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்
-
ஓய்வு பேராசிரியை வீட்டில் மீண்டும் திருட்டு கண்காணிப்பு வளையத்தில் பழங்குற்றவாளி