கார் டிரைவரால் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அமைச்சர் உதவி

ஈரோடு:வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, சித்தோடு ஆவினுக்கு சென்று முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட பின், காரில் ஈரோட்டில் உள்ள வீட்டுக்கு நேற்று காலை திரும்பி கொண்டிருந்தார்.


ஈரோடு-மேட்டூர் சாலை கல்யாண் சில்க்ஸ் அருகே, 10:50 மணியளவில் சாலையோரம் நின்றிருந்த ஹோண்டா சிட்டி காரின் கதவை, அதன் டிரைவர் திடீரென திறந்தார். அப்போது ஸ்கூட்டரில், 35 வயது பெண், மகனுடன் ஜி.ஹெச்., நோக்கி சென்றார். திடீரென திறக்கப்பட்ட காரின் கதவில் ஸ்கூட்டர் மோதி சாலையில் இருவரும் விழுந்தனர். அப்பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு காயம் ஏற்படவில்லை. அதேசமயம் அவ்வழியே வந்த அமைச்சர் முத்துசாமி, காரில் இருந்து இறங்கினார். சிறுவன், பெண்ணை ஆசுவாசப்படுத்தி ஆம்புலன்சை வரவழைத்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement