2 பெண்கள் உள்பட மூன்று பேர் மாயம்

ஈரோடு:ஈரோடு 46 புதுார் ஆதி திராவிடர் குடியிருப்பு, கருக்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி செந்தில் மகன் விஷ்ணு வருண், 12; இவரின் தாய், 11 ஆண்டுக்கு முன் குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார்.

லக்காபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் விஷ்ணு ஏழாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 21ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை செந்தில் அளித்த புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* ஈரோடு பெரியார் நகர் நல்லப்பா வீதியை சேர்ந்த சக்திவேல் மகள் யுவரேகா, 19; கடந்த, 18ல் வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. யுவரேகாவின் தாய் வெண்ணிலா புகாரின்படி டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
* ஈரோடு புதுார் ராயபாளையம் மாயபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் மனைவி மனோ அஞ்சலி, 23; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். குடும்ப தகராறால் கணவனை பிரிந்து இரு மாதங்களாக தாய் கவிதா வீட்டில் வசிக்கிறார். கடந்த, 19ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மனோ அஞ்சலி, வீடு திரும்பவில்லை. தாய் கவிதா புகாரின்படி சித்தோடு போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement