இணையதளத்தில் பதிவேற்றம்: கலெக்டர் ஆய்வு
பரங்கிப்பேட்டை: வாக்காளர் கணக்கெடுப் பு படிவங்களை, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிக்காக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலங்கள், ஊராட்சி மன்ற அலுவலங்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார், வி.ஏ.ஓ., அலுவலகம், பு.முட்லுார் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செ ய்தார்.
அவருடன், சப் கலெக்டர் கிஷண்குமார், வி.ஏ.ஓ., நேருதாஸ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.