போக்சோ சட்டம் விழிப்புணர்வு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். ஆசிரியை கலையரசி வரவேற்றார். சட்ட ஆலோசகர் ஜமுனா, போக்சோ சட்டம் பற்றி பேசினார். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் கமலா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் வடிவுக்கரசி நன்றி கூறினார்.

Advertisement