மது பாட்டில் விற்ற முதியவர் கைது
திட்டக்குடி: கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து சென்றனர்.
அப்போது முக்குளத்தி அம்மன் கோவில் அருகே, திட்டக்குடி, மேலவீதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 74; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement