மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது: எஸ்ஐஆர் குறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி: '' மேற்கு வங்கத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது,'' என எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பை கோரும் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள்(எஸ்ஐஆர்) நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தல் காலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி சனாதனி சங்சத் என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜாய்மாலா பக்ஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷனுக்கு பதில் வேறு சிலர் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், விஷயம் தீவிரமானதாக மாறிவிடும் என்றனர்.
நீதிபதி ஜாய்மாலா பக்ஷி: இந்த மனு அரசியல் ரீதியில் தொடரப்பட்டதா அல்லது, அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து உண்மையில் கவலை கொண்டு தாக்கல் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விவி கிரி: 2022- 23 காலத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டியதுடன், சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மேற்க்கோள் காட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
நீதிபதி ஜாய்மாலா பக்ஷி: ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் நடக்கவில்லை. மற்றது அனைத்தும் வரலாற்று குறிப்புகளாக உள்ளன.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: போலீசாரை பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தாமல் பிரச்னையை சரி செய்ய முடியாது. சமீபத்தில் தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
தலைமை நீதிபதி: சட்டம் ஒழுங்கு பிரச்னையை யாரோ ஒருவர் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது
ஜாய்மாலா பக்ஷி: கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநில அரசிடம் மனு அளிக்கலாம். அப்படி நடக்காவிட்டால், மனுதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரே வழக்குப்பதிவு, மேற்கு வங்கத்துக்கு மட்டும் பொருந்தும் எனக்கூற முடியுமா?
தலைமை நீதிபதி: மாநிலத்தில் அராஜகத்தை அனுமதிக்க முடியாது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு எதிராக தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், மத்தியபடை பாதுகாப்பு கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கூட அராஜகத்தை அனுமதிக்ககூடாது.
தாமதமின்றி உடனடி பாதுகாப்பு தேவை.
அய்யா இங்கே கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்று சொல்லி விட்டார்கள். கோர்ட் இவங்களை கட்டுப்படுத்தாது என்று அறிக்கை விட்டுள்ளார்கள். முதலில் கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம். இப்போது நீதிபதி மீது பாராளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்ய நூற்றி இருபது எம் பி கையெழுத்துடன் சமர்ப்பிப்பு. ஆக இவர்களை கோர்ட் டால் தண்டிக்க முடியாது. கேரள அரசாங்கம் முல்லை பெரியார் அணை விஷயத்தில் முரண்பாடு. கர்நாடகா அரசு காவிரி பிரச்சினையில் முரண்பாடு. ஆக சட்டம் சாமான்யர்களுக்கு மட்டும் தான். காசு உள்ளவன் சூப்ரீம் கோர்ட் படி ஏறலாம். ஆனால் ஏழைகள் கீழ் நீதிமன்றத்தில் கிடைக்கும் தீர்ப்பே போதுமானது என்ற மனநிலையில் உள்ளான். ஏனென்றால் வக்கீல் பீஸ் போக்குவரத்து செலவுக்கு இதுவே பரவாயில்லை என்கிற மனநிலை தான்
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை நாட கூடாது. அரசு , நீதிமன்ற பணி பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பணிபோன்றது. மன்ற கருத்து மாணவர் ஆசிரியர் போல் குறைத்து மதிப்பீடு செய்து உள்ளது.? மாநில போலீஸ் தேர்தல் பணியாளர் கலெக்டர் போன்ற முக்கிய அதிகாரிகள் பின் எப்போதும் பாதுகாப்பிற்கு செல்ல வேண்டும். கட்சிகள் மிரட்ட, மாற்றி விட்டனர். தேர்தல் இல்லை என்றால், மம்தா இல்லை. பல மாநில பாதுகாப்பிற்கு தான் மத்திய பாதுகாப்பு படை. மம்தா சட்ட ஒழுங்கை விரும்பினால், மத்திய படை பணியை ஏற்க வேண்டும். தடுக்க முடியாது.
அய்யா நீதிபதிகளே இந்த திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்பத்தின் ஊழல் அராஜக பேயாட்டம் பற்றியும் ஒங்க கவனத்த திருப்புங்க
செய்தியை முழுக்க படிச்சு பாருங்க .......
In several countries like venezuela colombia the elections are rigged completely so no proper democracy however India is completely different as we hold free and fair elections and if polling booths are not secure then it's a direct threat to democracyமேலும்
-
விண்வெளித் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள்; சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை
-
மனித உரிமைகளுக்கான கட்டமைப்பில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; ஜனாதிபதி பெருமிதம்
-
பெண் டாக்டர்களிடம் அத்துமீறல்: வம்சாவளி இந்தியர் கைது
-
மனநோயை துாண்டும் மரபணு கண்டுபிடிப்பு!
-
சொந்தமாக்கிக்கொள்ள ஒரு ரோபோ -கார்!
-
இரண்டு கருந்துளைகள் இணைய முடியுமா?