மனநோயை துாண்டும் மரபணு கண்டுபிடிப்பு!
மனநலப் பிரச்னைகள் பொதுவாக பல காரணிகளின் கலவையால் ஏற்படுபவை என்பது நீண்டகாலமாக நிலவும் கருத்து. இதை, ஒரு புதிய மரபணு ஆய்வு மாற்றியமைத்துள்ளது.
மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான 'கிரின்2ஏ' எனும் மரபணுவில் ஏற்படும் அரிய வளர்சிதை மாற்றம் (Mutation), தீவிர மனநோயை துாண்டக்கூடும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஏறத்தாழ, 200 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மரபணுவை முற்றிலுமாக செயலிழக்கச் செய்யும் 'நல்' (Null) வகை மாற்றம் கொண்டவர்களில், கால்வாசி பேருக்குச் சிறுவயதிலேயே மனச்சோர்வு, தீவிர பதற்றம் அல்லது உளவியல் சிக்கல்கள் இருப்பது உறுதியானது. அதேசமயம், வீரியம் குறைந்த மரபணு மாற்றம் கொண்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் குறைவாகவே இருந்தன.
பொதுவாக 'கிரின்2ஏ' பாதிப்பு, வலிப்பு அல்லது வளர்ச்சி தாமதத்துடன் தொடர்புடையது. ஆனால், இதில் சிலர் அத்தகைய உடல்ரீதியான அறிகுறிகள் இன்றியே மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒற்றை மரபணுவின் தோல்வி, எவ்விதத் துணையுமின்றி நேரடி உயிரியல் பாதையின் வழியாக மனநோயை உருவாக்கும் என்பதை இது உணர்த்துகிறது. எதிர்காலத்தில் மனநோயாளிகளுக்குத் துல்லியமான மரபணுப் பரிசோதனை செய்யவும், பிரத்யேக சிகிச்சை முறைகளை வகுக்கவும் இந்த ஆய்வு வழிகோலும்.
இது போன்ற கட்டுரைகளை மேலும் மேலு எழுதுங்க , Green2A அல்லது CRIN?மேலும்
-
ரூ.33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த 10 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்!
-
வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித் ஷா
-
ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு
-
நியூசிலாந்து அபார வெற்றி * வெலிங்டன் டெஸ்டில்...
-
அசாதாரண சூழ்நிலைகளில் விமான கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முடியும்: மத்திய அரசு
-
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதே திமுகவுக்கு வாடிக்கை; இபிஎஸ் காட்டம்