விண்வெளித் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள்; சுபான்ஷூ சுக்லா நம்பிக்கை
கோல்கட்டா: ''இந்தியா, விண்வெளித் துறையில் லட்சியங்களை விரிவுபடுத்தி வருவதால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்,' என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
ஆக்சியம்-4 திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா ஆவார். 18 நாள் பயணத்திற்குப் பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இவர் கோல்கட்டாவில் ஒரு நிகழ்வில் பள்ளி மாணவர்களுடன் பேசியதாவது:
41 ஆண்டு கால இடை வெளிக்குப் பிறகு மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. விண்வெளி என்பது இருப்பதற்கு ஒரு சிறந்த இடம். அது ஆழ்ந்த அமைதியையும், காலப்போக்கில் மேலும் வசீகரிக்கும். அற்புதமான காட்சியையும் கொண்டது.
வித்தியாசம்
நீங்கள் எவ்வளவு காலம் அங்கிருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அதை அனுபவிப்பீர்கள். உண்மையில், நான் திரும்பி வர விரும்பவில்லை. விண்வெளி பயணத்தில் பெற்ற நேரடி அனுபவம், தான் பயிற்சியின் போது கற்றுக்கொண்டவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இந்தியாவின் விண்வெளி அறிவியலின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையப் பயணம் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியமானது.
வளர்ச்சி
நாட்டின் விண்வெளி லட்சியங்களில் ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம், பாரதிய நிலையம் (இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம்), மற்றும் இறுதியில் நிலவில் மனிதன் தரையிறங்குவது ஆகியவை அடங்கும்.
நிலவுப் பயணம் 2040ம் ஆண்டை இலக்காகக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த 10-20 ஆண்டுகளில் இந்தத் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும். இந்த இலக்குகள் சவாலானவை என்றாலும், அவை உங்களைப் போன்றவர்களால் அடையக்கூடியவை.
சிறந்த நாடு
இந்தியா தனது மனித விண்வெளிப் பயணத் திறன்களை விரிவுபடுத்துவதால், இந்தத் துறை ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் இளைஞர்கள் மிகுந்த திறமைசாலிகள். அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆர்வத்துடன் இருக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும்.
2047க்குள்...!
2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க உதவுவது அவர்களின் பொறுப்பு. விண்வெளிப் பயணங்கள் ஒரு கிராமப்புறக் குழந்தைக்கும் ஒரு நாள் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கின்றன.
பல விண்வெளிப் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். விண்வெளியில் நடக்கும் பயணத்தை மேற்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். மேலும் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு சுபான்ஷூ சுக்லா பேசினார்.
இன்ஜினியரிங் காலேஜ் பீஸ் குறையுங்கள். படித்து முடித்தாலும் வேலை கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி? அடுத்து இட ஒதுக்கீடு தொல்லை வேறு? இந்தியாவில திறமைக்கு மதிப்பு இல்லை. அதனால்தான் அயல்நாடு சென்று பொருளீட்டுகின்றனர்.
அப்படியே இந்த திமுக குடும்பத்துக்கும் காங்கிரஸ் குடும்பத்துக்கும் விண்வெளியியலேயே ஏதாவது வேலை இருந்தால் கொடுத்து விடுங்கள். அவர்கள் அங்கேயே இருக்கட்டும். பூமிக்கு மீண்டும் வரவே வேண்டாம். நாடும் பிழைத்துப் போகும்.
India is advancing fast in the space exploration sector, this is necessary as countries like USA and china are building advanced space based weapon systems
விமான பைலட் மற்றும் விமான பராமரிப்பு இன்ஜினியரிங்கில் இன்னமும் நாம் முன்னேறவில்லை.. நிறைய பயிற்சி நிலையங்கள் தேவை ..ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான துறை கல்லூரிகளை துவங்க வேண்டும்.. விமான பாதுகாப்பு படை ஏர்போர்ட்களிலும் பைலட் ட்ரெய்னிங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் .. நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகும்.. பிறகு விண்வெளி துறை தானாக வளர்ச்சி அடையும்மேலும்
-
ரூ.33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த 10 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்!
-
வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித் ஷா
-
ஆறாவது இடத்தில் இந்தியா * டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பின்னடைவு
-
நியூசிலாந்து அபார வெற்றி * வெலிங்டன் டெஸ்டில்...
-
அசாதாரண சூழ்நிலைகளில் விமான கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முடியும்: மத்திய அரசு
-
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுப்பதே திமுகவுக்கு வாடிக்கை; இபிஎஸ் காட்டம்