ஹிந்து பெண், குழந்தை கடத்தல்: பாகிஸ்தானில் மர்ம நபர்கள் அட்டூழியம்

10

கராச்சி:பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்ணையும், அவரது ஒன்றரை வயது குழந்தையையும் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரின் ஷேர் ஷா பகுதியில் உள்ள சிந்தி மொஹல்லாவில் ஹிந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த வீட்டில் பெண் ஒருவரும், அவரது ஒன்றரை வயது மகளும் இருந்தனர்.


இந்த நிலையில் டிசம்பர் 6ம் தேதியன்று, அவர்களது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய கும்பல், வீட்டிலிருந்த பெண், அவரது குழந்தையை காரில் கடத்தி சென்றுவிட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரில் வீட்டிலிருந்து வெளிய சென்ற பெண், குழந்தை இருவரையும் மர்ம நபர்கள், வெளியே நின்றிருந்த வெள்ளை நிற ஆல்டோ காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்த சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement