ரூ.33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த 10 நக்சல்கள் சத்தீஸ்கரில் சரண்!

1

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 33 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த10 நக்சலைட்டுகள் சரணடைந்தனர்.


சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் நக்சல் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. இதை ஒடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல் இயக்கத்தை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஆறு பெண்கள் உட்பட 10 நக்சல்கள், தங்கள் ஆயு தங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்ட இவர்களைப் பற்றி தகவல் அளிப்போருக்கு 33 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 11 மாதங்களில், 1,514 நக்சலைட்டுகள் பஸ்தார் பகுதியில் ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 2,400 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். சமீப காலங்களில் சரணடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement