வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சர் அமித் ஷா
ஸ்ரீவிஜயபுரம்: வீர சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் முன்னிலையில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். பின்னர் அவரை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில், பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது;
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வில்லை. அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார்.
சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு தொடர்ந்து கொண்டே இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார். வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன்பாக, அந்தமான் நிகோபாருக்கு கொண்டு வரப்பட்ட நபர். சிறையில் இருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திர போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மதிப்பிற்குரிய திரு. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் வாழ்கை வரலாற்றையும் வீரசாகசத்தையும் அனைத்து இளஞ்சர்களும் மாணவ மாணவிகளும் படிக்க வேண்டும். இவர்கள் தான் நமது வழிகாட்டிகள் நமது ஹீரோக்கள். சாவர்க்கரை பாத்தாலே பிரிவினை வதிகள், தேசதுரோகிகள், மேற்கத்திய சிந்தனை கொண்டவர்கள், கம்யூனிஸ்ட் நக்சல்பாரிகள், மதமாற்ற கும்பல்களுக்கு ஆகாது பொய் பித்தலாட்டம் கூறி அவரை அவமானம் படுத்துவார்கள். திரு. வீரசாவர்கர் தேசபக்தர்களின் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். ஜெய் ஹிந்த்.
Jawaharlal Nehru literally wrote books and letters from prison, while Subramanya Siva and others were being tortured and flogged
வீர் சாவர்க்கர், சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா போன்றோர் அந்தமான் சிறைகளில் மிக கொடுமை படுத்தப்பட்டார்கள். சுப்ரமணிய சிவா ஆங்கிலேயர்கள் கொடுத்த துன்பத்தால் தொழு நோயால் இறந்தார். சுபாஷ் சந்திர போஸ் காட்டிக் கொடுக்கப்பட்டு ரஷியாவின் கடும் பனி பிரதேசமான சைபீரியாவில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்தார். ஆனால் அவர் விமான விபத்தில் இறந்தார் என்று பொய் செய்தி பரப்பப் பட்டது.
He was the real hero of India, while memebers of the INC were given prisons with good facilities, books, letter writing permission, toilets, sunlight etc freedom fighters like Savarkar, VO Chidambaram Pillai, Bharathiyaar etc were shut in terrible prisons in inhuman conditions, subjected to hard labour and whiplash and diseases and rotten food with worm infestationமேலும்
-
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
-
ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
'எய்ட்ஸ்' தடுப்பு திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது: தமிழக அரசு
-
வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு
-
3.38 லட்சம் சிறுமியருக்கு கருப்பைவாய் புற்றுநோய்: தடுப்பூசி அடுத்த மாதம் போட திட்டம்
-
கிராம உதவியாளர்கள் பேரணி