அசாதாரண சூழ்நிலைகளில் விமான கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த முடியும்: மத்திய அரசு
புதுடில்லி: ''அசாதாரண சூழ்நிலைகளில் விமான கட்டணத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசுக்கு உள்ளது,'' என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார்.
இது தொடர்பாக லோக்சபாவில் ராம் மோகன் நாயுடு பேசியதாவது: ஒரு வருடம் முழுவதும் விமானக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த முடியாது. நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பண்டிகைகளின் போது அவை அதிகரிக்கும். பண்டிகைக் காலங்களில் டிக்கெட் விலைகள் பொதுவாக உயரும் என்பதால், ஆண்டு முழுவதும் விமானக் கட்டணங்களை நிர்ணயிக்க முடியாது.
சமீபத்திய இண்டிகோ நெருக்கடியில் காணப்பட்டதைப் போல, அசாதாரண சூழ்நிலைகளில் விமானக் கட்டணங்களுக்கு வரம்புகளை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
பல இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், பிற விமான நிறுவனங்கள் இயங்காததாலும் பயண கட்டணம் அதிகரித்த போது, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் எங்களுக்கு வேண்டும். இவ்வாறு ராம்மோகன் நாயுடு பேசினார்.
இண்டிகோ குழப்பத்திற்கு மூல காரணம் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த ரூல்ஸ் தான். அதாவது விமான ஓட்டுனருக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு வந்தது , உடனே சத்தமில்லாமல் அந்த ரூல்ஸுகளை வாபாஸ் வாங்கிவிட்டது. இப்போது நாடகம் ஆடுகிறது. இண்டிகோ வை பழி வாங்க துடிக்கிறது,மேலும்
-
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
-
ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
'எய்ட்ஸ்' தடுப்பு திட்ட ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கிடையாது: தமிழக அரசு
-
வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு
-
3.38 லட்சம் சிறுமியருக்கு கருப்பைவாய் புற்றுநோய்: தடுப்பூசி அடுத்த மாதம் போட திட்டம்
-
கிராம உதவியாளர்கள் பேரணி