கூடலுார் துணை மின் நிலையம் 15ம் தேதி மின் தடை பகுதிகள்
ஊட்டி: உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலுார் துணை மின் நிலைய பகுதிகளில், 15ம் தேதி மின் வினியோகம் இருக்காது.
நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் வரும், 15ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம், இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதன்படி உப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலுார், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, உட் பிரேயர் நம்பர்-3 டிவின் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சேரம்பாடி நகரம், கன்னம்வயல், நாயக்கன் சோலை, கையுன்னி எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி மற்றும் சோலாடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
கூடலுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, கூடலுார், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீ மதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில், கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை எழுதிய நெடுஞ்சாலைத்துறை
-
உஸ்மான் ஹாதியின் கொலையாளிகள் குறித்து வங்கதேசம் சொல்வது பொய்; மேகலாயா போலீசார், பிஎஸ்எப் நிராகரிப்பு
-
அவதூறு பேசும் முதல்வர் ஸ்டாலின்; மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு
-
த.வெ.க., செங்கோட்டையனை சந்தித்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நீக்கம்
-
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
-
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக 13 லட்சம் பேர் பயன்!