நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக 13 லட்சம் பேர் பயன்!
சென்னை: 'உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வழியே, 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம், மிக சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன்பெறுகின்றனர்' என்று தெரிவித்திருந்தார். அதை மேற்கோள் காண்பித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
உங்களை தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து, 'உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்கள் வழியே, நேற்று முன்தினம் வரை, 13 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவற்றால், துவக்க நிலையிலேயே பல லட்சம் மக்களின் பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் உயிர் காத்துள்ளோம்.
முகாம்களிலேயே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து, மக்களின் துயர் துடைத்துள்ளோம். நலம் பெற்றவர்களின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இருக்காதே. உங்கள் குடும்ப உறுப்பினர்கள், மந்திரிகளின் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் சேர்த்தால் 13 லட்சம் பேர் வராதே.
பசித்தாலும் புல்லை தின்னாது பூனை ஆனால் இந்த பசி சமயம்பார்த்து அரசியலில் புகுவதற்கு அரசியல் புல்லை தின்னும் அதுதான் சம்யோஜிதமாக பேசுவது தனக்கும் தனக்கு மவனுக்கும் சாதகமான சூழ்நிலையை உண்டாக்கி அதில் விளையாடுவது இவருடைய வயதுகிற்கு சும்மா வீட்டில் படுத்துக்க கிடைக்க வேண்டியதுதானே இன்னும் இவருக்கு என்ன அரசியல் வாசனை நிறைய சம்பாதித்து புள்ளையாண்டானுக்கு வைத்தாகிவிட்டாச்சு இன்னும் என்னமேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்