கேரள அரசியலில் திருப்பு முனை: திருவனந்தபுரம் தேர்தல் வெற்றி குறித்து மோடி பெருமிதம்
புதுடில்லி:திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்றுகிறது. மேலும் வக்பு சட்ட திருத்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்த கேரளாவின் முனம்பம் பகுதியில், பாஜ வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு காரணமான வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜ மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். கேரள மக்கள் யுடிஎப் மற்றும் எல்டிஎப் கட்சிகளால் சலிப்படைந்துவிட்டனர். நல்லாட்சியை வழங்கி, அனைவருக்கும் வாய்ப்புகளுடன் கூடிய ஒரு விக்சித் கேரளத்தை உருவாக்கக்கூடிய ஒரே வழி என்டிஏ தான் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கேரளாவின் வளர்ச்சியை முழுமையாக அடைவது பாஜவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். பாஜ இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பாடுபடும்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் இந்த அற்புதமான வெற்றிக்கு வித்திட்ட, மக்களிடையே அயராது உழைத்த அனைத்து பாஜ தொண்டர்களுக்கும் எனது நன்றிகள். இன்றைய இந்த வெற்றி நிஜமாகியதற்கு காரணமான, பல தலைமுறை தொண்டர்களின் பணிகளையும் தியாகங்களையும் நினைவுகூர வேண்டிய நாள் இது. எங்கள் தொண்டர்களே எங்கள் பலம், அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (17)
V.Mohan - ,இந்தியா
14 டிச,2025 - 02:46 Report Abuse
.கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி அதான் தெரியுமே. ராகுலையும் , பிரியங்காவையும் எம்.பி.க்களாக அனுப்பி பெருமை பெற்ற மாநிலம் னாழ்க 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 டிச,2025 - 02:21 Report Abuse
அடுத்த திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் பாஜப எம்பி ஆகா தேர்நதெடுக்கப்பட்டு மத்தியில் ஆட்சியில் அவர் ஒரு காபினெட் அமைச்சபிராகவே இருப்பார் அயல்நாட்டு துறை அமைச்சராகவே இருப்பார் 0
0
Reply
Venugopal S - ,
13 டிச,2025 - 22:53 Report Abuse
உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியைக் கைபபற்றியதற்கே என்னவோ ஒலிம்பிக்ஸில் தங்கக் பதக்கம் வாங்கியது போல் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? 0
0
Reply
M.Sam - coimbatore,இந்தியா
13 டிச,2025 - 20:04 Report Abuse
காக்கா உக்கார பனை பலாம் விழுந்தது என்று ஊறில் ஒரு பழமொழி உண்டு முதல பிஜேபிக்காரன் புரிஞ்சிக்கோ 0
0
vivek - ,
13 டிச,2025 - 20:29Report Abuse
சாமு, பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான்...காங்கிரஸ் சொம்பு புரிஞ்சிக்கோ 0
0
vivek - ,
13 டிச,2025 - 20:30Report Abuse
யாருமே இல்லாத டீ கடையில் சாம் டீ போட்டார் 0
0
SUBBU,MADURAI - ,
13 டிச,2025 - 22:39Report Abuse
தமிழை ஏன் இப்படி கொலை பண்ற சகிக்க முடியல
உன்னோட கருத்து..... எவன் கேட்டான்?! 0
0
Reply
சிட்டுக்குருவி - chennai,இந்தியா
13 டிச,2025 - 19:38 Report Abuse
மக்கள் நீதிக்கு தலைவணங்குகின்றார்கள் .நேர்மை நீதி எப்போதும் வெல்லும் .சத்யமேவ ஜெயதே 0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
13 டிச,2025 - 19:07 Report Abuse
அண்ணாமலை அவர்கள் பா ஜா தமிழ் நாடு தலைமை ஏற்றால் வெற்றி பெரும் 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
13 டிச,2025 - 18:43 Report Abuse
அடுத்த தீபாவளியில் இருந்து நம்ம ... தீபாவளி வாழ்த்து சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 0
0
Reply
Subramaniyan Balachandran - Chennai,இந்தியா
13 டிச,2025 - 18:31 Report Abuse
பாஜக மேலும் மேலும் வென்று , நாட்டின் வளர்ச்சியை உலகின் முதல் நாடு என்ற இலக்கை நோக்கி பயணம் தொடரட்டும் . வளத்துடன் வாழ்க வையகம் . 0
0
Reply
Arul Narayanan - Hyderabad,இந்தியா
13 டிச,2025 - 18:26 Report Abuse
தமிழ் நாட்டிலும் அண்ணாமலையை தனித்து இயங்க அனுமதித்தால் இதேபோல் ஒரு நாள் பாஜக தனித்து சாதிக்க வாய்ப்பு கிடைக்கும். விஜய் குறுக்கே வரா விட்டால் இப்போதே கூட ஆரம்பித்து இருக்கலாம். 0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
13 டிச,2025 - 18:52Report Abuse
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை, அண்ணாமலையை திட்டமிட்டு ஓரம் கட்ட ஒரு கும்பல் தமிழக பாஜகவில் இருக்கிறது. அவர்கள் இருக்கும்வரையில் தமிழக பாஜக வளர வாய்ப்பேயில்லை. புரிந்தவன் பிஸ்தா. 0
0
Reply
rajasekaran - neyveli,இந்தியா
13 டிச,2025 - 18:24 Report Abuse
பெருமைக்குக்குரிய விழியம். கேரளாவிலும் பிஜேபி கால் பதித்து விட்டது. 0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
Advertisement
Advertisement