சிறுபான்மை கல்லுாரிகள் வழக்கு உயர் கல்வி செயலருக்கு 'நோட்டீஸ்'
சென்னை: நீதிமன்றம் உத்தரவிட்டும், 300க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததை அடுத்து, நான்கு சிறுபான்மை கல்லுாரிகள் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் கல்வித் துறை செயலர், சென்னை பல்கலை பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் நியமனங்களுக்கு, அரசு ஒப்புதல் பெற வேண்டும்.
கல்லுாரிகளில் முதல்வர், பேராசிரியர்கள் நியமனத்துக்கு தேர்வுக் குழு அமைக்க வேண்டும் என, கடந்த 2010ம் ஆண்டு பல்கலை மானியக் குழு விதிகள் வகுத்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'பல்கலை மானியக் குழு விதிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த லயோலா, ஸ்டெல்லா மேரீஸ், மகளிர் கிறிஸ்தவ கல்லுாரி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி ஆகிய நான்கு தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், 300க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் கோரி, சென்னை பல்கலைக்கும், உயர் கல்வித் துறைக்கும் விண்ணப்பித்தன.
ஆனால், பல்கலை மானியக் குழு விதிகளின்படி, தேர்வுக் குழு குறித்த விபரங்களை தெரிவிக்கவில்லை என கூறி, ஒப்புதல் கோரிய விண்ணப்பங்களை, அரசு திருப்பி அனுப்பியது.
இதன் காரணமாக, உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, நான்கு கல்லுாரிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, கடந்த 2023ம் ஆண்டு மார்ச்சில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு நகலை, தமிழக உயர் கல்வித் துறை, சென்னை பல்கலைக்கு அனுப்பியபோதும், இதுவரை அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, நான்கு கல்லுாரிகள் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், உயர் கல்வித் துறை செயலர், கல்லுாரி கல்வி இயக்குநர், கல்லுாரி கல்வி இணை இயக்குநர், சென்னை பல்கலை பதிவாளர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டார்; விசாரணையை ஜன., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அவர்களுக்கு சம்பளம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே.மேலும்
-
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்