பிரபல ஹாலிவுட் இயக்குநர் ராப் ரெய்னர், அவரது மனைவி கத்தியால் குத்திக்கொலை
லாஸ் ஏஞ்சலஸ்: லாஸ் ஏஞ்சலஸில் பிரபல ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள பிரென்ட்வுட் வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக நேற்று போலீசார் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த நபர்கள் குறித்து ஆரம்பத்தில் விபரம் வெளியாகாத நிலையில், பின்னர் அது ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிக்கேல் என்பது உறுதி செய்யப்பட்டது.
உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1971ல் நடிகராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் ஜொலித்தார். திஸ் இஸ் ஸ்பைனல் டேப், தி பிரின்சஸ் பிரைட் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். சிறந்த இயக்குநருக்கான கோல்டப் குளோப் விருதை 4 முறை வென்றுள்ளார்.
Interesting to read comments from people, who have never heard of Rob Rainer.
இது நம்ம அண்டை நாட்டில் போய் நிற்கும் . அந்த நாட்டின் பீலா மார்ஷல்க்கு வைட் ஹௌசில் விருந்து ...
படிக்க தெரியாத கமெண்ட் போட வந்திருச்சு .
கொலையும் செய்வாள் பத்தினி
இரண்டு பெருமே கத்தியால் குத்தப்பட்டனர் என்பது செய்தி...
கொலையும் செய்வாள் பத்தினியும் என்பது, தனது கற்புக்கோ, கணவனின் அல்லாது பிள்ளைக்கோ ஆபத்து வந்தால் கோலியும் செய்வாள் என்பதே, நீங்க தப்ப உங்க திராவிட புத்திய சொல்லிட்டீங்க.
அப்படியே திராவிட மாடல் ஆட்சி அமெரிக்காவில் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. நமது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எவ்வளவு வெட்டு குத்து கற்பழிப்பு துப்பாக்கி சூடு நடந்தாலும் எப்படி துணிச்சலாக தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்குன்னு பெருமித படுகிராரோ மக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடைகிறார் அதே போல டிரம்பும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்...
அது கலிபோர்னியா மாநிலம்.
அமெரிக்காவின் போலி டிராவிடமாடல் அரசு இப்போது ருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசு..
கத்திக்குத்து, துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சகஜம். இப்பொழுது டிரம்ப் இரண்டாம் முறை அதிபர் ஆனபிறகு மற்ற நாடுகள் மீறு அதிக வரி விதிப்பது, மற்றநாட்டு மக்களின் விசா கட்டணத்தை கண்மூடித்தனமாக உயர்த்துவது, இந்தியா போன்ற வளரும் நாடுகளை மிரட்டுவது கூட ரொம்ப சகஜமாகிவிட்டது. துப்புக்கெட்டவர் டிரம்ப்.மேலும்
-
அமெரிக்காவில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; பைலட் உயிரிழப்பு
-
தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
-
ரூ.3.63 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
-
ரூ.1.20 கோடிக்கு கால்நடை விற்பனை
-
த.வெ.க.,வில் சேர்ந்த மாற்று கட்சியினர்
-
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி