அமெரிக்காவில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; பைலட் உயிரிழப்பு
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில், பைலட் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
அட்லாண்டிக் கவுன்டியில் ஹாமண்டன் விமானநிலையத்திற்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டபடி, கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விபத்து குறித்து அறிந்த அதிகாரிகள், உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டனர்.
'என்ஸ்ட்ரோம் எப்-28ஏ மற்றும் என்ஸ்ட்ரோம் 280சி ஆகிய இரு ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதாக பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தின் போது, பைலட்டுகளை தவிர வேற யாரும் பயணிக்கவில்லை. இதில், ஒரு பைலட் உயிரிழந்தார். மற்றொரு பைலட் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருஹெலிகாப்டர்கள் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் வழித்தடம், தொலைத்தொடர்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
மேலும்
-
கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பற்றியது தீ: 16 பேர் பலியான சோகம்
-
'ஆன்டிபயாடிக்' மருந்துகளை தவிருங்கள்; டாக்டர்கள் ஆலோசனையின்றி பயன்படுத்தாதீங்க!
-
வெறிநாய் கடித்து எருமை உயிரிழப்பு... ரைத்தா சாப்பிட்ட மக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
-
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
-
சட்டசபை தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்