தைவானை சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சி; சீனா மெகா திட்டம்
ஹாங்காங்: தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவு தான் தைவான். பல ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. தைவான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா கூறி வருகிறது. இதனை தைவான் ஏற்க மறுக்கிறது. எங்களுக்கென்று தனி இறையாண்மை உள்ளது. நாங்கள் தனி நாடு தான் என தைவான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 29) பிரிவினைவாத மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தைவானைச் சுற்றி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் இத்தகைய அறிவிப்பால் கிழக்கு ஆசியப் பகுதியில் போர் பதட்டம் நிலவி வருகிறது.
அண்மையில், தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், ஜப்பானிய ராணுவம் தலையிடக்கூடும் என்று ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி கூறியிருந்தார். இதற்கு சீன ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. தற்போது சீன ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜப்பானைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
வாசகர் கருத்து (3)
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
29 டிச,2025 - 17:17 Report Abuse
வெங்கடேசு சூட்கேஸ் தூக்கிட்டு போயி காத்திருப்பான் கம்யூனிசத்தை கட்டிக்காக்க 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
29 டிச,2025 - 11:04 Report Abuse
வெறி பிடித்தவன். இவனால் அமெரிக்காவால் உலகில் எவருமே நிம்மதியாக வாழ முடியாது. மூர்க்கன்களை பயங்கரவாகளாக மாற்றியதில் அமெரிக்கா முதலிடம். 0
0
Reply
naranam - ,
29 டிச,2025 - 11:03 Report Abuse
அப்படியென்றால் சீனா தைவானக் கைப்பற்றப் போகிறது என்று அர்த்தம். 0
0
Reply
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை
-
ஈரான் அணுசக்தித் திட்டத்தை தொடங்கினால் அழித்துவிடுவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
Advertisement
Advertisement