தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி விருப்ப மனு வினியோகத்தை இன்று (டிச.,15) அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது. வழக்கமாக ஜனவரி மாதத்துக்குப் பிறகுதான், அரசியல் கட்சிகள் தேர்தலை நோக்கி வேகமெடுத்து செயல்படும். டிசம்பர் மாதத்தின் மத்தியிலேயே, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி விறுவிறுப்பு காட்டி வருகின்றன. ஏற்கனவே, அ.ம.மு.க.,வும் காங்கிரசும், விருப்ப மனு பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று (டிச.,15) தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வினியோகத்தை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தொடங்கிவைத்தார். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து, இபிஎஸ் இடம் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
கட்சியினர் வரும் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மனுக்களை பெறலாம். பூர்த்தி செய்து, 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விருப்ப மனுவுடன் செலுத்தப்படும் பணம் திருப்பி தருவதில்லை..தேர்தல் செலவுக்கு பயன்படுத்துவது வழக்கம்.. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 234 தொகுதிகளிலும் அவர் பெயரில் தொண்டர்களும் நிர்வாகிகளும் விருப்ப மனு அளிப்பது வழக்கம்
தேர்தல் விருப்ப மனு பெறுவது வேண்டாத வேலை. ஏமாற்று வித்தை நாடகம். கட்சி தலைமைக்கு நன்றாக தெரியும் நேர்மையான திறமையான நபர்கள் யார் என்று. அதுவல்ல காரணம். இதுமட்டும் போதாது.போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் அடியாட்கள் தேவை.
போட்டியிடுபவருக்கு பசை இருக்கவேண்டும் ...உங்களுக்கு போட்டியிடும் ஆசை இருக்கா ?
அது எல்லாம் கூட்டணி வெச்சிருக்கிற பீசப்பி யில் இருக்கு, கோயல் வேறு வந்து விட்டார் அமோகம் தான்
இந்த கூட்டத்திற்கு இது ஒரு குறுக்கு வழியில் சம்பாதிக்க ....
அதிமுக வெல்லட்டும்.
அதிமுக அலுவலகத்தில் மிகப்பெரிய கூட்டம் .தொண்டர் எழுச்சி காணப்பட்டது .அதை எந்த மீடியா காட்டாது. எழுதாது
கண்டிப்பாக வெல்லும்மேலும்
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்
-
உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள் கொண்டாட்டம்
-
குடியரசு தின விழாவில் முதல் முறை; விலங்கின அணிவகுப்பு ஏற்பாடு
-
ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்
-
அண்டார்டிகாவை வென்ற தமிழகத்து சிறுமி
-
போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? இபிஎஸ் கேள்வி