போதைப் பொருட்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? இபிஎஸ் கேள்வி
சென்னை: போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன. அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழகத்தில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, ராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற முதல்வரிடம் சிக்கித் தவித்தது போதும்.
2026ல் விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும். மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
தற்போதைய போலீஸ் அதிகாரம், நிர்வாக, நீதிமன்ற விசாரணை முறைகள் ஆளும் கட்சி உத்தரவு மீறி சட்டத்தை முழுவதும் பின்பற்ற முடியவில்லை. ? உதிரி கட்சிகள் ஆளும், எதிர் கட்சி இல்லாமல் மிரட்டி வசூல் செய்து வருகின்றன. அரசியல் வாதிகள் யாரும் கட்சிக்கு நிதி தானம் கொடுத்த செய்தி இல்லை . தேர்தல் ஆணையம் சீர்திருத்தம் தெளிவு இல்லை. தமிழகம், மேற்கு வங்கத்தில் போலி வாக்கு பதிவு அதிகம் இருக்கும்.? மம்தா சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம், கவர்னர் போன்ற முக்கிய பதவிகளை மிரட்டி வருகிறார். நீக்கி தடை செய்ய முடியவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி தேர்தல். 2 ஆண்டுக்கு பின் மாநில தேர்தல். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேசிய பாராளுமன்ற தேர்தல். அதிகாரிகள் அச்சம் குறையும்?
அப்போதில் இருந்து நீங்கள் control செயாததால் இப்படி வளர்ந்து விட்டது
அய்யா நீங்க என்ன வேறு கிரகத்தில் இருந்து வந்தீர்களா? திமுக இருப்பது கொள்ளை அட்டிப்பதற்கு மட்டுமே . ஆனால் ஸ்டிக்கர் ஒட்டுவது பெரிய நாடகம் போடுவது , போட்டோ சுட .. இதுதான் முக்கியம் . கஞ்சா விற்க உரிமை கொடுத்தால் தான் ஓட்டு விழும். எப்படி அவன் பொழப்பில் மண்ணை போடுவது . ஓட்டு கிடைக்காது
இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்பீங்கன்னு தெரிஞ்சுதான் தங்கச்சிய உட்டு நான் பிசி ன்னு சொல்ல சொல்ட்டேன் .....
போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது மிகவும் தவறு. அதை உபயோகிப்பவர்கள் விற்பவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
இவர் அப்படியே அறுத்து தள்ளிட்டார். எல்லாமே குப்பைகள் தான. பொதுவாகவே எல்லோருமே கொள்ளை அடிப்பதையே பிரதானமாக கொண்டுள்ள திருடர்கள்.
வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார்கள் ....படு காயமடைந்த அந்த வட மாநிலத்தவர் ஒரே நாளில் ஆஸ்பத்திரியிலிருந்தது அவராகவே டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டாராம் .....இப்படி அறிவித்தது தமிழ் நாடு போலீஸ் ....இப்படி ஒரு படு கேவலமான அட்டுழியும் அராஜகத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது ....படு காயம் உடலெங்கும் வெட்டுப்பட்ட அந்த வட மாநிலத்தவருக்கு என்ன ஆனது எங்கு சென்றார் என்ற கேள்விக்கு விடியல் பதில் என்ன ??.....
உங்கள் ஆட்சி வந்தால் கேட்க ஆட்கள் இருக்காது இதை விட மோசமான சூழ்நிலையில் தமிழகம் இருக்கும் காஞ்சா வரும் மாநிலம் பக்கத்தில் இருக்கிறது அங்கே ஆட்சி செய்வது உங்கள் கூட்டாளி
போதைப் பொருளை கட்டுப்படுத்துவது ஆட்சியாளர்கள் வேலை இல்லை. அவர்கள் தானாகவே கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடக்கூடாது என்பது எடுபிடிக்கு தெரியாதா? அரசை பின்பற வாசல் வழியாக எதிர்ப்பவர்களையும் பாஜக வின் கோட்பாடுகளை அதிமுக லெட்டர் பேடில் எழுதி குடுக்குறவங்களையும் தான் முதலில் கட்டுப்படுத்தணும். திராவிட மூடல் ஆட்சி உலக அரங்கில் முதன்மையான ஆட்சி. எடப்பாடியார் இது மாதிரி வெற்று அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும். பாஜக வின் ஜெராக்ஸ்தான் இந்த எடப்பாடி என்பதை மக்கள் அறிவர் வருகிற தேர்தலில் எடப்பாடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
வெங்கடாசலம் ஒரு தற்குறி என்று அவர் கருத்தில் முதல் மூன்று வரிகளில் தெரிந்துவிட்டது
தீயமுக வேறெதுக்கு ஆட்சில இருப்பானுவ? கொள்ளை அடிக்கத்தான்