இதே நாளில் அன்று
டிசம்பர் 24: விருதுநகரில், கந்தன் செட்டியார் - அங்கம்மாள் தம்பதியின் மகனாக, 1926, ஜனவரி 1ல் பிறந்தவர் வி.கே.ராமசாமி.
இவர், சிறு வயதில் பாலகான சபா, 'பாய்ஸ்' நாடக கம்பெனிகளின் நாடகங்களில் நடித்தார். நாம் இருவர் திரைப்படத்தில், தன் 21 வயதில், 60 வயது முதியவர் வேடமேற்று நடித்தார். தொடர்ந்து, அவருக்கு வயதான வேடங்களே கிடைத்தன.
கடந்த, 1950 - 1990 காலகட்டங்களில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், முத்துராமன், கமல், ரஜினி உள்ளிட்ட நாயகர்களின் படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் வேடங்களில் நடித்தார்.
இவரது நடை, அழுத்தம் திருத்தமான வசன உச்சரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மவுன ராகம், வருஷம் 16, ஆண் பாவம், அக்னி நட்சத்திரம், வேலைக்காரன், அதிசயப்பிறவி, டும் டும் டும் உள்ளிட்ட படங்களில் இவர் ஏற்ற பாத்திரங்களும், 'ராஸ்கோலு, அதுல பாருங்க சம்பந்தி' போன்ற இவரது வித்தியாசமான வசனங்களும் மறக்க முடியாதவை.
ஜோடிப்புறா படத்தை இயக்கியவர், பல படங்களை தயாரித்துள்ளார். 'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 76வது வயதில், 2002ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு