மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி
கூடலுார்: கூடலுார், ஜீன்பூல் தாவர மையத்தில் தியானம் மற்றும் யோகா செய்வதற்காக மூலிகை தோட்டத்தில், 4 லட்சம் ரூபாயில், அமைத்துள்ள தியான மண்டபம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
கூடலுார் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தில், சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலிகை செடிகள் அதன் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர். இங்கு, 150-க்கும் மேற்பட்ட மூலிகள் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதன் பெயர் அர்த்தம் மருத்துவ குணம் குறிக்கும் விபரங்களையும் வைத்துள்ளனர்.
மேலும், அமைதியான சூழலில் அமைந்துள்ள மூலிகை தோட்டத்தின் மையப்பகுதியில், 4.1 லட்சம் ரூபாய் செலவில், தியான மண்டபம் அமைத்துள்ளனர். மூலிகை தோட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், அமைதியான சூழலில் மண்டபத்தில் ஓய்வெடுத்து, தியானம், யோகாசனம் செய்யும், வகையில் மண்டபம் அமைந்துள்ளது. இந்த தியான மண்டபம் பணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வனத்துறையினர் கூறு கையில்,'மூலிகை தோட்டத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள்,மூலிகை செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், அங்கு ஓய்வெடுத்து செல்ல தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மிதமான காலநிலை நிலவும் இப்பகுதியில், தியானம் மற்றும் யோகாசனம் செய்வதுஉடலுக்கும், மனதுக்கும் இதமாகவும், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு