சி.ஐ.டி.யு., சாலைமறியல் ‍பங்கேற்ற 125 பேர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஐ.டி.யு., சார்பில், ஓசூர் காந்தி சிலை முன் நேற்று சாலைமறியல் போராட்டம் நடந்தது. மாநில செய-லாளர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். போராட்டத்தில், அங்-கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வை கால-தாமதமின்றி வழங்க வேண்டும்.


ஊரக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்-பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்-களை எழுப்பினர். சாலைமறியலில் ஈடுபட்ட, 65 பெண்கள் உட்-பட, 125 பேரை ஓசூர் டவுன் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.இதேபோல் பாப்பாரப்பட்டியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement