தேசிய உழவர் தின விழா

பாப்பாரப்பட்டி: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், தேசிய உழவர் தினம் ஆண்டுதோறும், டிச., 23ல் கொண்டாடப்படுகிறது. இந்-தாண்டு உழவர் தின விழா பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெண்ணிலா தலைமை வகித்தார். இதில் உளவியல் துறை பேராசிரியர் சிவகுமார், கிராமப்புற வேளாண்மையை மேம்படுத்த, வளர்ந்த இந்தியாவை படைக்க, வளர்ச்சியடைந்த கிராமப்புறங்கள் என்ற இலக்கை அடைவது குறித்து, விவசாயிக-ளுக்கு ஆலோசனை வழங்கினார். வேளாண்மையில் அதிக லாபம் பெற ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விளக்கம், புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்கள் ஆகி-யவை குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கால்நடைத்துறை பேராசிரியர் டாக்டர் தங்கதுரை, தோட்டக்கலைத்துறை பேராசிரியர் இந்துமதி, நுாற்புழுவியல் துறை பேராசிரியர் செந்தில் குமார், நோயியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் கலந்துரை-யாடினர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு புதிய ரக கொய்யா மரக்கன்று வழங்கப்பட்டன.

Advertisement