கிராம உதவியாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; 2வது நாளாக போராட்டம்
ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா ஈஞ்சம்பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணி செய்பவர் ஜெயந்தி. கிராம உதவியாளராக பணிபுரிபவர் கனிமொழி. இவரை அலுவலகத்துக்குள் அமர்ந்து பணி செய்யக்கூடாது என ஜெயந்தி கூறியுள்ளார்.
இதுபற்றி தாசில்தார் சிவசங்கரிடம், கனிமொழி புகார் செய்தும் வி.ஏ.ஒ., மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் கனிமொழி, புஞ்சை காளமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை கனிமொழி ஏற்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், வி.ஏ.ஓ.,வை கண்டித்தும், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும், தாசில்தார் மீது நடவடிக்கை கோரியும் நேற்று முன்தினம் முதல் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். ஈரோடு ஆர்.டி.ஒ., சிந்துஜா உட்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
மேலும்
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
-
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; போலீஸ் ஏட்டு அட்டூழியம்
-
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
-
கனடாவில் இந்தியப்பெண் படுகொலை
-
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு