மாரியம்மன் கோவில்களில் நடப்பாண்டு விழா துவக்கம்

ஈரோடு: ஈரோடு வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு திருவிழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் யாக பூஜை நடத்தி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை இரவு கம்பம் நடுதல், 30ம் தேதி மாலை தீர்த்தம் எடுத்து வருதல், 31ம் தேதி காலை பொங்கல் வைத்தல், மாலையில் மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

* சூரம்பட்டி வலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 27ம் தேதி இரவு கம்பம் நடுதல், 29ம் தேதி இரவு பூவோடு வைத்தல், ஜன.,7ம் தேதி பொங்கல், மாவிளக்கு எடுத்தல், 8ம் தேதி காலை கம்பம் பிடுங்குதல், 10ம் தேதி இரவு மறுபூஜை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement