குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு: குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், கலெக்டர் கந்தசாமி முன்னிலையில், ஈரோடு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காக்க, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம், தீ மற்றும் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வும் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டிய குழந்தைகள் சேர்க்கப்பட்டதை உறுதிப்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் உறுப்பினர்கள் கசிமிர்ராஜ், ஸ்ரீகாவியா நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement